உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாமல் மாரியம்மன் கோவிலில் காணும்பொங்கல் விமரிசை

தாமல் மாரியம்மன் கோவிலில் காணும்பொங்கல் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், மந்தைவெளி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், காணும் பொங்கல் அன்று விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா, நேற்று விமரிசையாக நடந்தது.நேற்று மாலை நடந்த காணும் பொங்கல் விழாவில், மந்தைவெளி அம்மன் சிம்ம வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.இதில், திரளான பக்தர்கள், அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தும், உடலில் முள் போடுதல், அலகு குத்துதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர்.விழாவில், தாமல் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை