உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இடிக்கப்பட்ட கழிப்பறை கட்டப்படாததால் துவக்க பள்ளி மாணவ - மாணவியர் அவதி

இடிக்கப்பட்ட கழிப்பறை கட்டப்படாததால் துவக்க பள்ளி மாணவ - மாணவியர் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி மந்தவெளி பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.கட்டடம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாணவ - மாணவியருக்கு அரசு மேம்படுத்தி கொடுத்துள்ளது. இருப்பினும், பள்ளிக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை.ஏற்கனவே கசக்கால்வாய் அருகே இருந்த கழிப்பறை கட்டடத்தை புதுப்பிக்க, இரு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டுள்ளது. பணி ஒப்பந்தம் எடுத்தவர் இன்னும் புதிய கழிப்பறை கட்டடம் கட்டிக் கொடுக்கவில்லை.இதனால், துவக்கப் பள்ளி மாணவ - -மாணவியர் திறந்தவெளியில் இயற்கை உபாதைக்கு ஒதுங்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது.எனவே, கோவிந்தவாடி ஊராட்சி துவக்கப் பள்ளிக்கு, தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை