உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சர்ச் வழிபாட்டில் பிரச்னை பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா

சர்ச் வழிபாட்டில் பிரச்னை பி.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா

உத்திரமேரூர்:ஆர்.என்.கண்டிகை சர்ச்சில் வழிபாடு நடத்தும் பிரச்னைக்கு தீர்வு கோரி, பி.டி.ஓ., அலுவலகத்தில், ஒரு தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.என்.கண்டிகை கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சர்ச் கட்டுமானம் பழுதடைந்துள்ளதாக கூறி, 20 ஆண்டுக்கு முன் வேறொரு இடத்தில் சர்ச் கட்டப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஒரு தரப்பினர் புதிய சர்ச்சிற்கு வராமல், பழைய சர்ச்சிலே வழிபாடு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றாலும், வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து, புதிய சர்ச் செயல்பட்டு வந்த கட்டடம், அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும், அதை அகற்றும்படியும், வட்டார வளர்ச்சி அலுவரான பி.டி.ஓ.,வுக்கு, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, ஒரு தரப்பினர், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பி.டி.ஓ., சூரியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை