உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போன் எடுக்காத செயல் அலுவலர் உத்திரமேரூரில் மக்கள் வாக்குவாதம்

போன் எடுக்காத செயல் அலுவலர் உத்திரமேரூரில் மக்கள் வாக்குவாதம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நடந்த வார்டு சபை கூட்டத்தில், குறைகளை தெரிவிக்க போன் செய்தால், செயல் அலுவலர் எடுப்பதில்லை என்று, மக்கள் குற்றஞ்சாட்டினர். உத்திரமேரூர் பேரூராட்சி, 5-வது வார்டில், சிறப்பு வார்டு சபை கூட்டம் நேற்று நடந்தது. வார்டு கவுன்சிலர் பாரதி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்: வார்டு மக்கள்: 5-வது வார்டு முழுதும், முறையாக கொசு மருந்து அடிப்பதில்லை. செயல் அலுவலர் பழனிகுமார்: கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு மக்கள்: குடிநீர் குழாய் பதிக்க உடைக்கப்பட்ட தெருக்களை சீரமைக்காமல் உள்ளதால், வாகனங்களை ஒட்டி செல்ல சிரமமாக உள்ளது. செயல் அலுவலர் பழனி குமார்: பேரூராட்சி முழுதும் உடைக்கப்பட்ட தெருக்களில் புதுபிக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. இந்த வார்டிலும் விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். வார்டு மக்கள்: அரசு தொடக்கப் பள்ளியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவ -- மாணவியர் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிப்பறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. செயல் அலுவலர் பழனிகுமார்: கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு மக்கள்: வார்டு குறைகளை தெரிவிக்க போன் செய்தால், செயல் அலுவலர் போனை எடுக்காமல் உள்ளார். வார்டு கவுன்சிலர் பாரதி: குறைகளை தெரிவிக்க நான் போன் செய்யும்போதே, செயல் அலுவலர் எடுக்காமல் இருப்பார் என்று மக்களை நோக்கி கூறினார். இதையடுத்து, செயல் அலுவலருக்கும், வார்டு கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அத்துடன் கூட்டம் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ