உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் குறைதீர் கூட்டம் 580 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 580 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 580 மனுக்கள் பெறப்பட்டன.குவாரிக்கு பதிலாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுதாமூர் கிராமத்தினர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா கேட்டும், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்ற கோரி என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 580 பேர் மனு அளித்தனர்.மனுக்களை பெற்றுக்கொண்ட, கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.கருணை அடிப்படையில், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய பணியிடங்களுக்கு பணி ஆணை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை வழங்கினார்.இதையடுத்து, சிறுதாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள், தனித்தனியாக ஆறுவழி சாலை அமைக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியதாவது:ஆறுவழி சாலை அமைக்க நிலம் அளவீடு செய்தனர். இன்னும், நிலம் கையகப்படுத்தவில்லை. அதே இடத்தில் கல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனால், விவசாய கிணறுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளன. எனவே, குவாரிக்கு பதிலாக, ஆறுவழி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை