உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைக்கு சேதமான சாலை ‛பேட்ச் ஒர்க் பணியாக சீரமைப்பு

மழைக்கு சேதமான சாலை ‛பேட்ச் ஒர்க் பணியாக சீரமைப்பு

காஞ்சிபுரம்: மழைக்கு சேதமான காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் பேட்ச் ஒர்க்' பணியாக, ரெடிமேட் தார் கலவை மூலம் சீரமைத்தனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு வழியாக அய்யங்கார்குளம், வெம்பாக்கம், பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் காவலான்கேட் முதல், செவிலிமேடு பாலாறு பாலம் வரையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டதால், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், பேட்ச் ஒர்க்' பணியாக சேதமடைந்த சாலையை ரெடிமேட் தார் கலவை மூலம் நேற்று சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை