மேலும் செய்திகள்
ஈஞ்சம்பாக்கம் தரைப்பாலம் தடுப்புகளின்றி அபாயம்
10-Sep-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலை உள்ளது. காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை வழியாக செல்லும் பயணியர், கூரம் கேட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம் மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர்.இந்த சாலை, குண்டும் குழியுமாக மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. சாலையில் உருவாகியுள்ள மரண பள்ளங்களில், மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்லும் அபாயம் உள்ளது.எனவே, செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க முன் வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
10-Sep-2024