உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

திருப்பருத்திகுன்றம்:திருப்பருத்திகுன்றம் கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், திருப்பருத்திகுன்றம் கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, திருப்பருத்திகுன்றம் கால்வாயின் அகலத்தை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை