வெள்ளாரை சாலையை மூழ்கடித்த மழைநீர்: சிரமத்தில் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கொளத்துாரில் இருந்து, வெள்ளாரை செல்லும் சாலையை மூழ்கடித்து சென்ற வெள்ள நீரால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், கொளத்துாரில் இருந்து பிரிந்து வெள்ளாரை, குண்டுபேரும்பேடு வழியாக, கண்ணந்தாங்கல் செல்லும் சாலை வழியே, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் துார்வாராததால், நேற்று முன்தினம் பெய்த கன மழை யில், வெள்ள நீர் வெள்ளாரை சாலையை மூழ்கடித்து கரை புரண்டு ஓடியது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.