உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஸ்ரீபெரும்புதுாரில் பேரணி

சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஸ்ரீபெரும்புதுாரில் பேரணி

ஸ்ரீபெரும்புதுார்:தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.அதன்படி, 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு, இம்மாதம் 1ம் தேதி முதல், புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், புதிய கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி, புரட்சி பாரத கட்சியினர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடியை நோக்கி பேரணியாக சென்று, சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனர்.அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ