உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், அவற்றை அதிகாரிகள் பிடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.இந்நிலையில், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர், நேற்று துவாஸ்கரை தெருவில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.அங்கு, 35 சிப்பங்களில், 1,500 கிலோ ரேஷன் அரிசி உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது. சம்பந்தப்பட்ட வீட்டில், விக்கி என்பவர் வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இதுதொடர்பாக, குடிமை பொருள் வழங்கல் அதிகாரி கொடுத்த புகாரை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ