மேலும் செய்திகள்
நுாலகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
18-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 33வது வார்டு, விளக்கடிகோவில் தெருவில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதனால், அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2022 - 23ம் ஆண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 13.57 லட்சம் ஒதுக்கீடு செய்ததில், புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.மேலும் அங்கன்வாடி மையத்தை ஒட்டி புதிதாக ரேஷன் கடை கட்டவும் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 18.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இந்நிதியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது.ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் என, இரு கட்டடங்களும் கட்டப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.எனவே, விளக்கடிகோவில் தெருவில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் கூறுகையில், ''விளக்கடிகோவில் தெருவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டங்களை ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
18-Oct-2024