உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை கட்டடம் சோமநாதபுரத்தில் திறப்பு

ரேஷன் கடை கட்டடம் சோமநாதபுரத்தில் திறப்பு

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், 2வது வார்டில் சோமநாதபுரம் பகுதியில். ரேஷன் கடைக்கான கட்டடம்மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதனால், மழைக்காலத்தில் ரேஷன் கடையில் இருப்பு வைக்கும் உணவு பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதனால், அப்பகுதி யில் புதிய நியாயவிலை கட்டடம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.அதன்படி, உத்திரமேரூர் சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், 16 லட்சம் ரூபாய் செலவில் இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு வந்தது.இதற்கான பணி முழுமை பெற்றதையடுத்து, நேற்று, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்தார்.இதேபோன்று, உத்திரமேரூர் பேரூராட்சி, நல்லூ ரில் பழுதான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந் தது. அதை அகற்றி புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.உத்திரமேரூர் சட்ட சபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் செலவில்அப்பகுதியில் புதியஅங்கன்வாடி கட்டடம்கட்டப்பட்டு வந்து பணி முழுமை பெற்றதையடுத்து நேற்று உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்தார்.உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன், பேரூராட்சித் தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை