மேலும் செய்திகள்
செவிலிமேடு பாலத்தில் மணல் குவியல் அகற்றம்
17-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையின் இருபுறமும், சீமைக்கருவேலம், நாணல் வகை உள்ளிட்ட பல்வேறு செடிகளும், மீடியனில் களைச்செடிகளும் நீண்டு வளர்ந்து இருந்தன.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை இச்செடிகளின் முட்கள் மற்றும் கிளைகள் பதம் பார்த்து வந்தன. எனவே, பொன்னேரிக்கரை சாலையோரம் மற்றும் மீடியனில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்ட நெடுஞ்சாலைத் துறையினர் பொன்னேரிக்கரை சாலையோரம் மற்றும் மீடியனில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகளை நேற்று அகற்றினர்.
17-Nov-2024