உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சேதமடைந்த பொன்னேரிக்கரை சாலை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைப்பு

 சேதமடைந்த பொன்னேரிக்கரை சாலை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைப்பு

காஞ்சிபுரம்: மழைக்கு சேதமடைந்த காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையை நெடுஞ்சாலைத் துறையினர், 'பேட்ச் ஒர்க்' பணியாக நேற்று சீரமைத்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பல்வேறு வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், மழையால், பொன்னேரிக்கரை சாலை ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், இச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறை சார்பில், சேதமடைந்த சாலை, 'பேட்ச் ஒர்க்' பணியாக, ரெடிமேட் தார் கலவை கொட்டி நேற்று சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ