உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளை குடியரசு தின கிராம சபை கூட்டம்

நாளை குடியரசு தின கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன.அதன்படி, நாளை குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, நடப்பாண்டிற்கான செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பிற தீர்மானங்களும் நிறைவேற்றலாம் என, ஊரக வளர்ச்சி துறையினர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ