மேலும் செய்திகள்
பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
10-Nov-2025
தாட்டித்தோப்பு: காஞ்சிபுரம் தாட்டித் தோப்பு மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு, தாட்டித்தோப்பு பல்லவன் நகரில், காஞ்சிபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தில் நாய்கள், மாடுகள் உலாவுகின்றன. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர், பள்ளி வளாகத்தில் மது அருந்திவிட்டு, காலி மது பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்து விட்டுச் செல்வதால், மாணவ-மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி தாட்டித்தோப்பு மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
10-Nov-2025