உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விரிவாக்க சாலை பகுதிகளில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

விரிவாக்க சாலை பகுதிகளில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

வாலாஜாபாத், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் இருவழி சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி ஓராண்டாக நடைபெறுகிறது. வாலாஜாபாத் அடுத்த வெண்குடி, ஒட்டிவாக்கம், திம்ம ராஜம்பேட்டை, கருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இச்சாலையில், பகல், இரவு என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருவழிச் சாலையாக இருந்தபோது, அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலையோரம் மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்கு ஏற்படுத்தப்பட்டு, தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், விரிவாக்கம் செய்ததையடுத்து, சாலையோரத்தின் மற்றொரு புறம் மின்வசதி இல்லாமல் இருள்சூழ்ந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருன்றனர். குறிப்பாக, திம்மராஜம்பேட்டை உள்ளிட்ட அபாயகரமான சாலை வளைவுகளில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.எனவே, விரிவாக்கம் செய்துள்ள காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில், புதிதாக மின்கம்பங்கள் அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை