உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை

மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்டது புதுரோடு கிராமம். இக்கிராமத்திற்கான மயானம், அப்பகுதி ஏரிக்கரை அருகே உள்ளது. சாலையில் இருந்து, மயானம் செல்லும் பாதை மண் பாதையாக உள்ளது.மேலும், மயானத்தில் சுற்றுசுவர், எரிமேடை உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே, ஆண்டிசிறுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோடு கிராம மயானத்திற்கு சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை