உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை வசதி ஏற்படுத்த கோரிக்கை

நிழற்குடை வசதி ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் அடுத்து அவளூர் கூட்டுச்சாலை வழியாக இளையனார்வேலுார், அங்கம்பாக்கம், கீழ்பேரமநல்லுார், காவாந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன. அவளூர், ஆசூர், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர், இப்பகுதி பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயணியர் நிழற்குடை கட்டடம் பழுதடைந்துள்ளது. இதனால், இப்பகுதியில்பயணியர் நிழற்குடை இருந்தும், பயன்படுத்த இயலாத நிலை உள்ளதால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் சாலை ஓரத்தில் நின்று வெயில் மற்றும் மழையில் அவதிபடும் நிலை உள்ளது. எனவே, அவளூர் பேருந்து நிறுத்தத்தில், புதிய நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி