உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக செல்கின்றன. மேம்பாலத்தில் செல்வோரின் வசதிக்காக இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மேம்பாலத்தின் மைய தடுப்பில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் வாகனம் மோதியதில் ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குள் உடைந்து, கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது .மற்றொரு இடத்தில் சாய்ந்து விழுந்த தெரு மின் விளக்கு கம்பம் அகற்றப்பட்டுள்ளது.சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்காததால் இரவு நேரத்தில், போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த தெரு மின்விளக்கு கம்பத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ