உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க கோரிக்கை

சேதமான இரும்பு தடுப்பு சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:அய்யன்பேட்டையில் வாகனம் மோதியதில் சேதமான இரும்பு தடுப்பை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருத்தணி செல்லும் சாலை 85 கி.மீ., உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டு சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், நடைபாதையோரம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அய்யன்பேட்டையில் உள்ள இரும்பு தடுப்பில் வேகமாக வந்த வாகனம் மோதியது. இதில் தடுப்பு சேதமானது. சேதமான இரும்பு தடுப்பை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை