உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எறையூர் சாலை சேதம் சீரமைக்க கோரிக்கை

எறையூர் சாலை சேதம் சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:சேதமடைந்த எறையூர் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எறையூர் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லக்கோட்டையில் இருந்து, எறையூர் கிராமத்திற்கு பிரதான சாலை செல்கிறது. அப்பகுதி மக்கள், தங்களின் அன்றாட தேவைக்காக, இந்த சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். அதேபோல், பேரீஞ்சம்பாக்கம், வளத்தாஞ்சேரி, வைப்பூர் உள்ளிட்ட கிராமத்தினர், ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட 'சிப்காட்' வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தினமும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தவிர, எறையூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்காகன கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலை, சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எறையூர் பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி