உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வில்லிவலம் வேகவதி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

வில்லிவலம் வேகவதி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

வாலாஜாபாத்: வில்லிவலம் வேகவதி ஆற்று தரைப்பாலம் மீது போக்குவரத்துக்கு இடையூறான கழிவுகளை அகற்றி வழி ஏற்படுத்த அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தில் இருந்து, கருக்குப்பேட்டை செல்லும் சாலையில் வேகவதி ஆற்றின் இணைப்பாக தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது உடைத்தெடுத்த தரைப்பாலம் பக்கவாட்டு கான்கிரீட் சுவரின் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் தரைப்பாலம் மீது குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வசதி இல்லாத இச்சாலையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, வில்லிவலம் வேகவதி ஆற்று தரைப்பாலம் மீது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கான்கிரீட் கழிவுகளை அகற்றி, சீரமைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை