உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழையசீவரத்தில் வி.ஏ.ஒ., அலுவலகம் ஏற்படுத்த கோரிக்கை

பழையசீவரத்தில் வி.ஏ.ஒ., அலுவலகம் ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது. அக்கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட கட்டடமாக உள்ளது.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிகள் மேற்கொண்டு வருகிறார். அது மகளிர் திட்ட செயல்பாட்டிற்கான கட்டடம் என்பதால், வருவாய் துறை சம்பந்தமாக ஆவணங்களை பெற பொதுமக்கள் செல்லும்போது இட நெருக்கடி பிரச்னை உள்ளது.எனவே, பழையசீவரம் பகுதியில் வி.ஏ.ஒ., அலுவலகத்திற்கு என, புதிதாக கட்டடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை