உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தவெளி கிணறால் வட்டம்பாக்கத்தினர் அச்சம்

திறந்தவெளி கிணறால் வட்டம்பாக்கத்தினர் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:வட்டம்பாக்கம் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு மத்தியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது.பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாத இந்த கிணறு, திறந்த நிலையில் உள்ளது. இதனால், கிணற்றின் அருகில் விளையாடும் அப்பகுதி குழந்தைகள் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.கிணற்றில் தடுப்பு அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகதிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே, இப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமம் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை