சொத்து வரி விதிப்பில் மாற்றம் கோரி குடியிருப்போர் சங்கத்தினர் மனு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அதியமான் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், சங்க தலைவர் அரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி 43வது வார்டு செவிலிமேடு பகுதிக்கு சொத்து வரி மதிப்பு 'ஏ' மண்டலத்தை 'சி' மண்டலமாக மாற்றக்கோரி, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.மனு விபரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி அதியமான் நகர் மற்றும் ஒரு சில பகுதி, செவிலிமேடு பேரூராட்சியாக இருந்ததை, 2011ம் ஆண்டு, காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, தற்போது, மாநகராட்சி 43வது வார்டாக உள்ளது.சொத்து வரி விதிப்பு 'ஏ' மண்டலமாக இருப்பதை, 'சி' மண்டலமாக மாற்றக்கோாரி பலமுறை விண்ணப்பித்துள்ளோம்.எங்கள் பகுதியை தவிர்த்து 43வது வார்டில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சி' மண்டலமாக வரிவிதிப்பு செய்து, வசூல் செய்து வருகின்றனர். எங்கள் பகுதி மட்டுமே 'ஏ' மண்டலமாக உள்ளது.இதனால், நடுத்தர வருவாய் உள்ள மக்கள் வசிக்கும் எங்கள் பகுதியான அதியமான் நகரை 'சி' மண்டலமாக மாற்றி வரி வசூல் நிர்ணயம் செய்யும்படி சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.