பள்ளி தேர்ச்சியை அதிகரிக்க மேலாண்மை குழுவில் தீர்மானம்
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பொது தேர்வுகளில் பள்ளி தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெருவில் உள்ள டாக்டர் பட்டுக்கோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரவணன், துணைத் தலைவர் ஜெயரக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசு பொது தேர்வுகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது குறித்தும், போதை இல்லா தமிழகம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இடைத்தேர்வின் தேர்ச்சி குறித்து விவாதித்து மாணவர்கள் மீது சிறப்பு கவனம் மேற்கொள்வது என, தீர்மானிக்கப்பட்டது.