உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

உத்திரமேரூர்:வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, உத்திரமேரூர் வட்ட கிளை சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் தயாளன் தலைமை தாங்கினார். அதில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்களை முடிவு செய்திட கால அவகாசம் அளித்திட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி