உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்திருக்கும் மின்பெட்டியால் விபத்து அபாயம்

திறந்திருக்கும் மின்பெட்டியால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கூசாபேட்டை பாவாஜி தெருவில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, சீரான மின்சாரம் வினியோகிக்கும் வகையில், மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள மின்கம்பம் சாலையோரம் உள்ளது.இக்கம்பத்தின் அடிப்பாகத்தில் உள்ள மின் உபகரணங்கள் உள்ள மின்பெட்டி திறந்து இருக்கிறது. சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் துாரத்தில் மின்பெட்டி திறந்து இருப்பதால், இவ்வழியாக செல்லும் குறும்புக்கார சிறுவர்கள் மின்ஒயர்களை பிடித்து இழுத்தாலோ, மேய்ச்சலுக்காக உலாவும் மாடுகள் மின்பெட்டியில் உரசினாலோ மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பாவாஜி தெருவில் சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் துாரத்தில் திறந்து இருக்கும் மின்பெட்டியை பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை