உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த குடிநீர் தொட்டியால் பெண்டையில் விபத்து அபாயம்

சேதமடைந்த குடிநீர் தொட்டியால் பெண்டையில் விபத்து அபாயம்

தாமல்:காஞ்சிபுரம் அடுத்த, தாமல் ஊராட்சியில், சாணார் பெண்டை துணை கிராமம் உள்ளது. இங்கு, 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்த நீர்த்தேக்க தொட்டி வாயிலாக, பெண்டை கிராமத்தில் இருக்கும் குடியிருப்புகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்த நீர்த்தேக்க தொட்டி பில்லர்களின் அடிபாகத்தில் இருக்கும் சிமென்ட் காரை பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. வட கிழக்கு பருவ மழைக்கு, பலமாக காற்று அடித்தால், அருகில் இருக்கும் ஓட்டு வீட்டின் மீது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன், பெண்டை கிராமத்தில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி