உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உள்ளாவூர் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

உள்ளாவூர் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

வாலாஜாபாத்,: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அடுத்து உள்ளாவூர் உள்ளது. உள்ளாவூர் பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் பேக்கரி மற்றும் தேனீர் விடுதி செயல்படுகிறது.இச்சாலை வழியாக, லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகள், கடைக்கு செல்வதற்காக சாலையையொட்டி வாகனங்கள் நிறுத்துகின்றனர்.நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, லாரிகள் நிறுத்தப்படுவதால், அப்பகுதி பிரிவு சாலை வழியாக பிரதான சாலைக்கு வரும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.மேலும், நிறுத்தப்பட்ட லாரிகள் மீண்டும் புறப்படும்போது, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, உள்ளாவூர் பேருந்து நிறுத்தம் அருகே, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தம் செய்வதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை