உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழையால் சாலை சேதம் சீரமைப்பு பணி துவக்கம்

மழையால் சாலை சேதம் சீரமைப்பு பணி துவக்கம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், தென்மேற்கு பருவ மழைக்கு சேதமான சாலைகள், நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர்- - புக்கத்துறை, உத்திரமேரூர்- - மானாம்பதி மற்றும் உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் ஆகிய தடத்தில், பழுதான சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உத்திரமேரூர் உதவி கோட்ட பொறியாளர் அனந்த கல்யாணராமன் கூறியதாவது:பருவமழை துவங்கி உள்ளதால், முன்னதாக மழைக்கு சேதமான சாலைகள் பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.உத்திரமேரூர் ஒன்றியத்தில் சேதமாகி உள்ள மாநில நெடுஞ்சாலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, அச்சாலைகள் சீர் செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி