உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை

ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, எட்டாவது வார்டில் அண்ணாநகர் பகுதி உள்ளது. அண்ணாநகரில், தனியார் மேல்நிலைப் பள்ளி வழியாக செல்லும் மில் ரோடு உள்ளது.வெள்ளேரியம்மன் கோவில், வாலாஜாபாத் ரயில் நிலையம், கிதிரிப்பேட்டை, புத்தாகரம் உள்ளிட்ட பகுதியினர், மில்ரோடு வழியை பயன்படுத்தி வாலாஜாபாத் வந்து செல்கின்றனர். மேலும், தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர், இச்சாலை வழியாக தினமும் பள்ளி சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சாலை பழுதடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.இதனால், இச்சாலை வழியாக வாகனங்கள் இயக்க முடியாமலும், மழை நேரங்களில் சேற்றில் சிக்கியும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை