உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் குப்பையை எரிப்பதால் ஆற்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

சாலையோரம் குப்பையை எரிப்பதால் ஆற்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

ஆற்பாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கம் ஊராட்சியில், 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் சேகரமாகும் குப்பை, பிரதான சாலையோரம் உள்ள அரசு துணை சுகாதார நிலையம் அருகில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.குப்பையில் எரிந்து வெளியேறும் நச்சு புகையால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மேலும், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.எனவே, சாலையோரம் குப்பை எரிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிப்பதோடு, ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்து முறையாக கையாள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை