மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்கம்
2 hour(s) ago
நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்
2 hour(s) ago
இன்று இனிதாக ... (16.11.2025) காஞ்சிபுரம்
2 hour(s) ago
பழையசீவரம் பாலம் சாலை பெயரளவிற்கு சீரமைப்பு
2 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் பிரதான சாலையோரம் மலைபோல குவிக்கப்பட்டுள்ள இளநீர் மட்டையால், அப்பகுதியில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட காரணங்களால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வைரஸ், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கோனேரிகுப்பம் பிரதான சாலையோர இளநீரை வெட்டி விற்பனை செய்யும் வியாபாரிகள், இளநீர் மட்டையை அதே பகுதியில், சாலையோரம் மலைபோல குவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இளநீர் மட்டையில் தேங்கும் மழைநீரில் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி, கோனேரிகுப்பத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது. எனவே, சாலையோரம் மலைபோல குவிக்கப்பட்டுள்ள இளநீர் மட்டையை அகற்ற வேண்டும் என, கோனேரிகுப்பம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago