மேலும் செய்திகள்
காரை ரவுடி குண்டாசில் கைது
13-Jun-2025
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகுவை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஏழாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரத்தில் தொழிலதிபர்களையும், பட்டு சேலை முதலாளிகளையும் மிரட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்து, கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்ட பிரபல ரவுடி ஸ்ரீதர் பாணியை, பிரபல ரவுடியான 'ஏ' பிளஸ் ரவுடி பொய்யாக்குளம் தியாகு,41 கையாண்டு வந்தார். தொழிலதிபர்களை மிரட்டுவது மட்டுமல்லாமல், இடையே கொலை வழக்கில் மூளையாக செயல்படுவது இவரது வழக்கம்.ரவுடி தியாகு மீது, 12 கொலை வழக்குகள், 23 கொலை மிரட்டல் உள்ளிட்ட, 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜெயிலில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டி கொலை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். விழுப்புரம் தி.மு.க., நகர செயலர் செல்வராஜ் கொலை வழக்கு, காஞ்சிபுரம் தே.மு.தி.க., நிர்வாகி சரவணன் கொலை வழக்கு என முக்கிய அரசியல் கொலைகளுக்கும் தியாகு தான் முக்கிய குற்றவாளி. இதுவரை, ஆறு முறை இவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடியான வசூல் ராஜா கொலை வழக்கில் தியாகு சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்.பி.,சண்முகம் பரிந்துரை செய்தார். தொடர்ந்து, தியாகுவை, கலெக்டர் கலைச்செல்வி, நேற்று ஏழாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். சிறையில் உள்ள தியாகுவிடம், குண்டாசில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.
13-Jun-2025