உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கவுன்சிலர் மகனை தாக்கிய ரவுடி உறவினர்கள் மறியலால் கைது

கவுன்சிலர் மகனை தாக்கிய ரவுடி உறவினர்கள் மறியலால் கைது

படப்பை,ஆரம்பாக்கம் கவுன்சிலரின் மகனை தாக்கிய ரவுடி உட்பட இருவரை, உறவினர்களின் சாலை மறியலை தொடர்ந்து போலீசார் கைது செய்தனர். படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஊராட்சி, ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தி.மு.க., பிரமுகரான இவர், 5வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் ராக்கி, 11, நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, அங்கு போதையில் இருந்த, அதே பகுதியை சேர்ந்த ரவுடி பாலாஜி, சிறுவன் ராக்கியை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்து தப்பிய சிறுவன், படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தன் மகனை தாக்கிய ரவுடி மீது, மணிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, ஆரம்பாக்கம் கூட்டுச்சாலை சந்திப்பில், இரவு 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். அதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். மேலும், சிறுவனை தாக்கிய ரவுடி பாலாஜி, 30, உடந்தையாக இருந்த அலெக்ஸ், 28, ஆகிய இருவரையும், மணிமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தால், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ