மேலும் செய்திகள்
லாரி - பைக் மோதல் வாலிபர் பலி
30-Jan-2025
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, கீராநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் எம்பார், 56. சுங்குவார்சத்திரத்தில் சலுான் கடை வைத்து நடந்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில், சோகண்டியில் இருந்து சுங்குவார்சத்திரம் சென்றார்.சுங்குவார்சத்திரம் அருகே வந்த போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, எதிர்பார விதமாக மோதினார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவமர்கள் பரிசோதித்ததில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
30-Jan-2025