உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

காஞ்சிபுரம், ஆக. 31– அருந்ததியர்பாளையத்தில், முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி விமரிசையாக நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஆவணி திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணி அளவில், 21 திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை பொன்னியம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சியும், மலர் அலங்காரமும் நடந்தது. இரவு, முத்துமாரியம்மனுக்கு மலர் அலங்காரமும், கும்ப படையலிடும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை