உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் பருவ மழைக்காக மணல் மூட்டைகள் தயார்

உத்திரமேரூரில் பருவ மழைக்காக மணல் மூட்டைகள் தயார்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், பருவமழை பாதிப்பை தடுக்க, 1,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. உத்திரமேரூரில், அருணாச்சலப் பிள்ளை சத்திரம் பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் பருவமழை நேரங்களில், ஒன்றியத்திற்கு உட்பட்ட 73 கிராமங்களில் உள்ள, 60 ஏரிகளின் கரை உடைவதை தடுக்க, 1,000 மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணி நேற்று நடந்தது. அவ்வாறு தயார் செய்யப்படும் மணல் மூட்டைகள், எந்த கிராமத்தில் கரை உடைந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதோ, அங்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணிகளுக்காக அந்தந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தன்னார்வலர்கள், கிராம மக்கள், விவசாயிகள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா கூறியதாவது: உத்திரமேரூர் ஒன்றியத்தில் மழை நேரங்களில், ஏரிக்கரைகள் உடைப்பு ஏற்படுவதை தடுக்க, 1,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கிராமங்களில் உள்ள ஏரிகளை கண் காணிக்க, அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஏரிகளில் கரை உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக மணல் மூட்டைகளை அனுப்பி வைக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ