உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உக்கம்பெரும்பாக்கத்தில் வரும் 29ல் சனி பெயர்ச்சி விழா

உக்கம்பெரும்பாக்கத்தில் வரும் 29ல் சனி பெயர்ச்சி விழா

உக்கம்பெரும்பாக்கம்:சனீஸ்வர பகவான் வரும் 29ம் தேதி, இரவு 9:44 மணிக்கு, கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து கலச ஸ்தாபனம், 27 நட்சத்திர பரிகார சாந்தி ஹோமம் நடக்கிறது.காலை 11:00 மணிக்கு, சனீஸ்வர பகவானுக்கு விசேஷ கலசாபிஷேகமும், 11:30 மணிக்கு சனிபெயர்ச்சி மஹா தீபாராதனையும், பிற்பகல் 12:00 மணிக்கு சுவாமி பிரசாதம் விநியோகம், தொடர்ந்து பரிகார அர்ச்சனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி