கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் வீணாகும் சிற்பங்கள்
காஞ்சிபுரம்:திருப்புட்குழி கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள், கட்டடங்கள் வலுவிழக்கும் நிலையில் உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபுரம் முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. குறிப்பாக, கோபுரத்தின் மீது இருக்கும் சிற்பங்களின் இடையே அரச செடிகள் மற்றும் பல்வேறு செடிகள் வளர்ந்துள்ளன. இது நாளடைவில், கோவில் கட்டடம், சிற்பங்களை வலுவிழக்கச் செய்யும் நிலையில் உள்ளது.எனவே, விஜயராகவப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மீது வளர்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.