உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.2 கோடி மதிப்பு கட்டடத்திற்கு சீல் வைப்பு

ரூ.2 கோடி மதிப்பு கட்டடத்திற்கு சீல் வைப்பு

மாங்காடு:மாங்காடு நகராட்சி, பள்ளிக்கூட தெருவில் உரிய அனுமதியின்றி, வணிக வளாகம் கட்டப்படுவதாக தகவல் கிடைத்தது.மாங்காடு நகராட்சி கமிஷனர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதில், விதிமுறைகளை மீறி, 30 கடைகள் உடைய வணிக வளாகம் கட்டடம் கட்டப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து வணிக வளாகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.'சீல்' வைக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய் எனவும், மாங்காடு நகராட்சியில் இதுபோல் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ