உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மயங்கி விழுந்த செக்யூரிட்டி பலி

மயங்கி விழுந்த செக்யூரிட்டி பலி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே நாவலுார் கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜேக்கப் மனோகரன், 53. மாம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலக உபயோக கண்ணாடி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை பணியில் இருக்கும் போது, திடீரென மயங்கி கிழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !