உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டில்லியில் கார் வெடித்த சம்பவம் எதிரொலி காஞ்சி கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

டில்லியில் கார் வெடித்த சம்பவம் எதிரொலி காஞ்சி கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

காஞ்சிபுரம்: புதுடில்லியில் கார் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நகரின் முக்கிய கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டின் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் மாலை கார் ஒன்று வெடித்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சதிச்செயல் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், நாடு முழுதும் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய புராதன நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முன்தினம் இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியும் மேற்கொண்டு உள்ளனர். கோவில் அருகே சுற்றித்திரியும் சந்தேகமான நபர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ