குட்கா பொருள் பறிமுதல் மூன்று பேருக்கு காப்பு
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.அதன்படி, ஒரகடம் அடுத்த நாவலுார் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளில், நேற்று முன்தினம் திடீர் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.அந்த கடைகளில் 'ஹான்ஸ், விமல், கூலிப், ஸ்வாகத்' உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளர் செழியன், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.அதேபோல், குண்ணவாக்கம் பகுதியில் நடத்திய சோதனையில், குண்ணவாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த அப்துல்காதர், 61, சயத் அலி, 30, ஆகிய இருவர் உட்பட மொத்தம் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 6,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.