விதிமீறிய கனரக லாரிகள் பறிமுதல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரு தாலுகாக்களிலும் கல்குவாரி, கிரஷர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.குவாரியிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் கனரக லாரிகள், அதிக எடையுடன், தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுகிறது. இதனால், விதிமீறும் லாரிகள் மீது வருவாய் துறையும், வட்டார போக்குவரத்து துறையினரும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வாலாஜாபாத் சுற்றியுள்ள அய்யம்பேட்டை, ராஜாம்பேட்டை போன்ற இடங்களில், தாசில்தார் கருணாகரன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.அப்போது, விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த, 10 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மொத்தம் 6.48 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.