கொரோனா சிகிச்சைக்காக 10 படுக்கையுடன் தனி வார்டு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்காக, 10 படுக்கை வசதியுடன் தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனாவிற்காக 66 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான, ஜெ.என்., 1 மற்றும்எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன. இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின்விகிதம் குறைந்தே காணப்படுகிறது.காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என,தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சைக்காக, 10 படுக்கை வசதியுடன் தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது.மருந்து, மாத்திரைகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில்பொதுமக்கள் முகக்கவசம் அணிவதோடு, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடிக்க வேண்டும.இவ்வாறு அவர் கூறினார்.