உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால் வசதியில்லாததால் தெருவில் தேங்கும் கழிவுநீர்

வடிகால் வசதியில்லாததால் தெருவில் தேங்கும் கழிவுநீர்

ஸ்ரீபெரும்புதுார்:வல்லம் ஊராட்சியில் வடிகால் வசதி இல்லாததால், குடியிருப்பு அருகே தேங்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லம் ஊராட்சி, சிவன் கோவில் செல்லும் சாலை அருகே 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர், சாலை மற்றும் திறந்த வெளியில் வழிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர். மேலும், சாலையோரம் தேங்கியுள்ள கழிநீரால் குழந்தைகள், வயதானோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். தவிர, அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வடிகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை